ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக சமீபத்தில் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி உத அளித்தது. அதன் காரணமாக தமிழ் இருக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது கனடா இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தில்  25 ஆயிரம் டாலர்களைநிதியுதவியாக வழங்கியுள்ளார்.

கனடாவின் டொரன்டோ நகரில் கடந்த அக்டோபர் 20,  21தேதிகளில் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக் கச்சேரி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி காரணமாக திரட்டப்பட்ட பணத்தில் ஒரு பகுதியாக  25 ஆயிரம் டாலர்கள் (இந்திய பணத்தில், 16 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்)  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிதிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கி உள்ளார்.

இதுகுறித்து பேசிய ரகுமான், இது ஒரு சிறு பங்களிப்பு என்றும்,  உலகத் தமிழர்கள் தமிழ் இருக்கை நிதிக்கு தங்களால் ஆன பங்களிப்பைத் தர வேண்டும் என்பதற்காக இதைச் செய்வதாகவும் கூறினார்.