டில்லி:

அப்பா, அண்ணா, குலாப்ஜாமுன், வடா போன்ற 70 இந்திய வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

தெலுங்கு, உருது, தமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளில் இருந்து வார்த்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான வார்த்தைகள் உறவு முறைகளையும், உணவு வகைகளையும் குறிப்பிடுபவையாகும்.

இந்திய மொழிகளை சேர்ந்த 900 வார்த்தைகள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது. இதில் கடந்த செப்டம்பரில் கூடுதல் வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. நேரடியாக ஆங்கிலத்துடன் தொடர்பு இல்லாத வார்த்தைகள் இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி ஒரு ஆண்டில் மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் திருத்தங்களை மேற்கொண்ட புதிதாக வெளியிடும் நடைமுறையை கொண்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது.