
கேதர்நாத்,
உ.பி.மாநிலத்தில் உள்ள பிரபலமான கோவிலான கேதர் நாத் கோவிலுக்கு இன்று பிரதமர் மோடி வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
ஏற்கனவே கடந்த மே மாதம் சாமி தரிசனம் செய்த நிலையில், தற்போது மீண்டும் சாமி தரிசனம் செய்தார்.
பஞ்ச பாண்டவர்களால் 3000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பின்னர் எட்டாம் நூற்றாண்டில் இந்திய தேசத்தில் வாழ்ந்த ஆகப்பெரிய ஆன்மீக குருவான ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரால் புனரமைக்கப்பட்ட பெருமை வாய்ந்த கோயில் தான் இந்த கேதர்நாத் ஆகும்.
புகழ்பெற்ற கேதார்நாத் ஆலயம், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 660 அடி உயரத்தில் இந்த கோவில் அமைந்துளளது.
ஒவ்வொரு ஆண்டும் பனிக்காலத்தின்போது கோவில் நடை மூடப்படுவது வழக்கம். ஏப்ரல் முதல் நவம்பர் வரையே திறந்திருக்கும் அதுபோல இந்த ஆண்டும் பனிக்காலத்திற்காக கேதர்நாத் ஆலயத்தின் பாதைகள் அடைக்கப்பட உள்ள நிலையில், கடைசி நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி இறைவழிபாடு செய்தார்.
ஏற்கனவே கடந்த மேமாதம் கேதர்நாத் வந்து சுவாமி தரிசனம் மேற்கொண்ட மோடி, தற்போது மீண்டும் சுவாமி தரிசனம் செய்தார்.
அதையடுத்து இன்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆதி சங்கராச்சாரியார் நினைவுஸ்தூபிக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், கோவிலுக்கு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இதனால் டேராடூன் விமான நிலையம், கேதர்நாத் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
[youtube-feed feed=1]