
சென்னை,
திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் 6 மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எழுச்சி பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சென்று திமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.
ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது திமுகவினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து தற்போது மீண்டும் 180 நாள் எழுச்சி பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அடுத்த மாதம் ( நவம்பர்) 7ம் தேதி தனது முதல்கட்ட பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது கட்சித் தொண்டர்களை சந்தித்து ஸ்டாலின் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்கட;ll பயணத்தைத் தொடங்கி 180 நாட்கள் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான கட்சியின் அறிவிப்பு இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு வெளியாகுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]