சென்னை

பொது இடங்களில் உள்ள வைஃபை மூலம் இணைய தாக்குதல்கள் (Cyber attacks) நடக்கலாம் என அரசு நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

மொபைல் மற்றும் கணினி மூலம் இண்டர்நெட் உபயோகிக்கும் போது பலர் நமது தகவல்களை நமக்கே தெரியாமல் திருடி விடுகின்றனர்.  இதுவே சைபர் அட்டாக் என அழைக்கப்படும் இணையத் தாக்குதல்கள் ஆகும்.   இது போல திருடப்படும் நமது தகவல்கள் பல சமூக விரோதிகளிடம் செல்வதால் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொள்ளைப் போவது,  பயங்கரவாதிகள் நமது தகவல்களை உபயோகிப்பது போன்ற பலவும் நிகழ்கின்றன.

சென்னையில் இயங்கி வரும் அரசு நிறுவனமான  இந்தியக் கணினி ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில்  ரெயில் நிலையம், ஏர் போர்ட் போன்ற இடங்களில் அளிக்கப்படும் இலவச வைவை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் எனக் கூறிஉள்ளது.    இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்களான விமான நிலையம், ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் இலவச வைஃபை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.  அங்கு நீங்கள் இலவச வைஃபை உபயோகிக்கும் போது உங்கள் கணினி அல்லது மொபைலில் உள்ள உங்களது க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகளின் விவரங்கள் திருடப்பட அதிகம் வாய்ப்புள்ளது.

இந்த திருட்டானது ஆண்டிராய்ட், ஐஓஎஸ், லினக்ஸ், விண்டோஸ் ஆகிய தளங்களில் எதை நீங்கள் உபயோகித்தாலும் நடை பெற வாய்ப்புக்கள் உள்ளது.  இது போல தகவல் திருட்டுக்கள் நடைபெற்றவைகளில் 41% ஆண்டிராய்டு சாதனத்தில் இருந்து திருடப்பட்டவையாகும். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் செக்யூரிடி ஒர்க்ஸ் என்னும் நிறுவனத்தின் ஸ்தாபகர் ராம் ஸ்வரூப், “எல்லா வைஃபைகளிலுமே எச்சரிக்கை தேவை.   அந்த ரேஞ்சுக்குள் இருக்கும் வேறு ஒரு சாதனம் மூலம் மற்ற சாதனங்களில் உள்ள தகவல்களை திருடுவது எளிது.  சில வேளைகளில் அந்த நபர்  அந்த வைஃபை நெட் ஒர்க்கில் தான் இருப்பதையே வேறு யாருக்கும் தெரியாதபடி மறைந்திருக்க முடியும்.   பாஸ்வர்டுகள் மாற்றப்படுவதால் இந்த திருட்டை தவிர்க்க முடியாது.   அதற்கு பதிலாக லான் கனெக்‌ஷன் உபயோகிப்பது நல்லது” என கூறி உள்ளார்.