நெட்டிசன்
தீபாவளையை முன்னிட்டு நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் பாதுகாப்பு செய்தி :
*மத்தாப்பு கொளுத்திய கம்பிகளை தண்ணீரில் நனைத்து ஓரமாக போடுங்கள்*
*பூவானம், தரைச்சக்கரம் முதலியவற்றை கையில் வைத்து கொளுத்தாதீர்கள்; அவைகள் நூறு சதவீத சாதுக்கள் இல்லை*
*தண்ணீர் நிரம்பிய பாத்திரம் ஒன்றை வாசலில் வைத்திருங்கள்*
*கால்நடைகள் நாய்கள் பூனைகள் இவற்றை தொந்தரவு செய்யாமல் வெடி வெடியுங்கள்; குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்*
*குழந்தைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள்; பலகாரம் செய்யும் இடங்களில் பிள்ளைகளை அனுமதிக்காதீர்கள்*
*வெடி வெடிக்கவில்லை என்று கையில் எடுத்து பார்க்காதர்கள்*
*கூரை வீடுகளுக்கு அருகே சிதறும் வகை பட்டாசுகளை வெடிக்காதீர்கள்*
*வீட்டு பெண்களை பருத்தியாடை அணிந்து கொண்டு பலகாரங்கள் செய்யச் சொல்லுங்கள்; முறுக்கு பிழிவது மிகவும் கடினமான வேலை கூடவேயிருந்து உதவுங்கள்*
*ஈரசாக்குகளை தயார் நிலையில் வைத்திருங்கள், பலகாரம் செய்யுமிடங்களில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை தேவையில்லாத பொருட்களை வைக்காதீர்கள்*
*பலகாரம் செய்யும் போது எண்ணெய் சிந்தினால் உடனே துடைத்து விடுங்கள் வழுக்கிவிழ வாய்ப்புகள் உண்டு*
*புத்தாடைகளை மஞ்சள் கறை வைத்து உடுத்துங்கள்; பாரம்பரிய பழக்க வழக்கங்களை கறாராக கடைபிடியுங்கள்*
*எண்ணெய் தேய்த்து குளியுங்கள், உறவுகளோடும் நண்பர்களோடும் நேரம் செலவிடுங்கள்; தீபாவளி அன்று திரைப்படத்திற்கு சென்று பண்டிகை நாளை வீணாக்காதீர்கள்*
*மாற்று மத நண்பர்கள் இருந்தால் அழைத்து வந்து நம் வீட்டு கொண்டாட்டங்களை காண்பித்து இனிப்பு வழங்கி நம் பாரம்பரியத்தை புரிய வையுங்கள்*
*ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பண்டிகை நாளில் சண்டை போடாதீர்கள் குழந்தைகளை இனிமையாக விழாவை அனுபவிக்க விடுங்கள்*
அனைவருக்கும் இனிய
✨தீபாவளி வாழ்த்துகள் ✨