டில்லி:

போராட்டங்கள் மேற்கொள்வது கல்வி நிறுவனங்களில் அல்ல. கல்வி நிறுவனங்களில் போராட்டங்களை அனுமதிக்க முடியாது  என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில அரசியல் போராட்டங்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று கேரள உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. கல்வி நிறுவனங்களில் அரசியல் கூடாது என்று இதற்கு முன்பும் பலமுறை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த பதினைந்து வருடங்களுக்கு இடையே இது போன்ற பல தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இத்தீர்ப்பும் அதன் தொடர்ச்சியே என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒவ்வொரு செயல்களுக்கும் அதற்கான இடமுண்டு. .போராட்டங்களை மேற்கொள்வது கல்வி நிறுவனங்களில் அல்ல. எர்ணாகுளம் மரைன் டிரைவ் போன்று, கல்வி வளாகங்களுக்கு வெளியில் உள்ள இடங்களில் போராட்டங்களை மேற்கொள்வது நல்லது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பொன்னாணி எம்.இ.எஸ். கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வழக்கை எடுத்துக் கொண்ட நீதிமன்றம், போராட்டங்களும் சத்தியாக்கிரகங்களும் கல்வி நிறுவனங்களில் கூடாதென்றும் படிப்பிற்கு இடையூறு செய்யும் வகையில் போராட்டங்களை மேற்கொள்பவர்களை கல்வி நிறுவனங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கல்வி வளாகங்கள் போராட்டங்களை நடத்துவதற்குரிய இடமல்ல. படிப்பதற்குரிய இடம். படிப்பதற்கு மட்டுமே மாணவர்கள் அங்கே வருகின்றனர். அவ்வாறு இல்லாமல், போராட்டங்கள், புரட்சி, சத்தியாகிரகம் மூலம் அரசியல் இலாபம் அடைவதுதான் நோக்கம் என்றால், அவர்கள் தங்கள் படிப்பைக் கைவிட்டு விட வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் படிப்பதற்குரிய சூழலைக் கெடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்கும் அதிகாரம் கல்லூரிக்கு உண்டு என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது