சென்னை,

மிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் கடந்த 13ந்தேதி தமிழகம் வந்தனர். அவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் ஆய்வு செய்துவந்தனர்.

டெங்கு பாதிப்புகுறித்து, மத்திய மருத்துவக் குழு தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த சில நாள்களாக கள ஆய்வு செயது வந்தது.

மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில், ஐந்து மருத்துவர்கள்கொண்ட மத்திய வல்லுநர் குழு, டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின்போது, டெங்கு காய்ச்சலின் வேகத்தைக் கட்டுப்படுத்த, அறிவுறுத்தல்களை இந்தக் குழு தமிழக அரசுக்கு வழங்கியது.

தமிழகத்தில் இரண்டு நாள்களாக நடத்திய கள ஆய்வை நிறைவுசெய்த பின், நேற்று புதுச்சேரியில் மத்திய மருத்துவக் குழு ஆய்வுசெய்தது.

டெங்கு பாதிப்பு குறித்த ஆய்வை நிறைவு அடைந்ததை தொடர்ந்த, மத்திய குழுவினர் இன்று பிற்பகல் 2 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதைத்தொடர்ந்து இன்று மாலை டில்லி  செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறையிடம்  நாளை அல்லது ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.