ல்வார், ராஜஸ்தான்

ராஜஸ்தானில் பால்பண்ணை வைத்திருந்த ஒரு இஸ்லாமியரிடம் இருந்து 51 பசுக்களை போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள ஆல்வாரில் இருந்து 51 கிமீ தூரத்தில் உள்ளது கிஷன்கர் கிராமம்.   இங்கு சுப்பர் கான் என்னும் இஸ்லாமியர் பால் பண்ணை நடத்தி வந்துள்ளார்.  இவர்களுடைய வாழ்வாதாராம் பால் விற்பனை மட்டுமே.  இவரும் இவருடைய குடும்பத்தினரும் மாடு மேய்த்து தினமும் சுமார் 90 லிட்டர்கள் வரை பால் விற்பனை செய்து வந்தனர்.

சமீபத்தில் சுப்பார் கானின் மனைவி பசேரி தனது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.   அப்போது அங்கு வந்த சில இளைஞர்கள் அவருடைய மாடுகளை ஓட்டிச் செல்ல்ல முயன்றுள்ளனர்.   அவர்கள் இந்த மாடுகளை சுப்பார்கான் கடத்தியதாக குற்றம் சாட்டி உள்ளனர்.  போலிசுக்கு தகவர் தெரிவித்து அவர்களும் வந்துள்ளனர்.   ஆனால் அவர்கள் சுப்பார் கானின் குடும்பத்தினர் சொன்னதை நம்பவில்லை.    போலீசாரும் இளைஞர்களும் சேர்ந்து பசேரியை தள்ளி விட்டு விட்டு அந்த மாடுகளை ஓட்டிச் சென்று அருகில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோ சாலையில் அடைத்து விட்டனர்.

தற்போது சுப்பார் கான் தனது மாடுகளை மீட்க காவல் நிலையத்துக்கும் வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருக்கிறார்.   அந்தப் பசுக்களை அவர் விலைக்கு வாங்கி நெடுங்காலமாக பராமரித்து வருவதாக அவர் தெரிவித்ததை போலீசார் நம்பவில்லை.   அந்த ஊர் மக்கள் பலரும் சுப்பார் கான் அந்தப் பசுக்களை கடத்தி வரவில்லை என போலீசுக்கு தெரிவித்தும் அவர்களின் பேச்சையும் போலீஸ் ஏற்கவில்லை.

போலீஸ் தரப்பில், “இந்த மாதம் 3ஆம் தேதி கிராமத்தினர் சிலர் மாடுகளை சாலையில் மேய விட்டிருந்தனர்.   அதனால் நாங்கள் அவர்களை மாடுகளை வீட்டுக்கு ஓட்டிச் செல்லுமாறு கோரினோம்.   அவர்கள் மறுக்கவே நாங்கள் சட்டப்படி மாடுகளைக் கைப்பற்றி சாலையில் இடையூறு செய்தமைக்காக அந்த மாடுகளை கோசாலையில் வைத்துள்ளோம்.   தேசிய நெடுஞ்சாலையை இது போல மாடுகள் மேய்க்க விடுவது குற்றமாகும் என தெரிவித்தார்.

இதே பகுதியை சேர்ந்த பெஹ்லு கான் என்பவர் ஆறு மாதங்களுக்கு முன் பசுக்களை கடத்துவதாகக் கூறி பசுக் காவலர்களால் அடித்து உதைக்கப்பட்டு பின் மருத்துவமனையில் உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது.