சென்னை,

மிழகத்தில் போதுமான அளவுக்கு கட்டடிட வசதி இல்லாத பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம் தொடங்கும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் பல இடங்களில் மாணவர்களின் தேவைக்கேற்ப பள்ளிக்கட்டிங்கள் இல்லை. அதுபோல ஏராளமான ஊர்களில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளது. இந்நிலையில், பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சேதமடைந்துள்ள  பழைய பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து கட்டப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும், அனைத்து பள்ளிகளிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும் என்றும், பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.