டில்லி,

ந்திய தேர்தல் ஆணையம் நேற்று இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டது. அதே நேரத்தில், குஜராத் தேர்தல் குறித்தும் அறிவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், குஜராத் தேர்தல் குறித்து பின்னர் அறிவிப்பதாக கூறியது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

குஜராத்தில் காங்கிரசுக்கு செல்வாக்கு பெருகி வருவதால், பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது சிரமம் என்று அங்கிருந்து வரும் கருத்துகணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், குஜராத்தில் மோடி கலந்துகொள்ளும் பேரணி ஒன்று அடுத்த வாரம் நடைபெற உள்ளது. அந்த பேரணிக்கு வரும்  மக்களின் ஆதரவை தொடர்ந்தே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், நேற்று தேர்தல் ஆணையம் இமாச்சல பிரதேச தேர்தல் தேதி மட்டும் அறிவித்துவிட்டு, குஜராத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 18ந்தேதிக்குள் நடைபெறும் என்று பொத்தாம் பொதுவாக கூறினார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளது. மோடியின் பேரணி காரணமாக, பாரதியஜனதா கொடுத்த அழுத்தம் காரணமாகவே குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் தாமதப்படுத்தி உள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட இமாச்சலில் உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதுபோல குஜராத்திலும் நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தால், தேர்தல் நல்லடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டி ருக்கும், இதன் காரணமாக காந்திநகரில்  மோடி கலந்துகொள்ளும் பேரணிக்கு தடை விதிக்கப்படும், அப்போது மாநில வளர்ச்சி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்பட முடியாது  என்பதால்தான் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாஜ அழுத்தம் கொடுத்ததன் காரணமாக,  தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல்  குற்றம் சாட்டி உள்ளது.

அதேபோல், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷியும், தேர்தல் கமிஷன் தேதி அறிவிக்காதது குறித்து, தேர்தல் ஆணையம், சரியான காரணங்களை தெரிவிக்க  வேண்டும் என்றும், அடுத்தவாரம் குஜராத்தில் மோடி மேற்கொள்ள உள்ள பயணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறி உள்ளார்.