
சென்னை,
தமிழகத்தில் நடப்பாண்டில் 11 புதிய கல்லூரிகளை தொடங்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி உள்ளார்.
தமிழக உயர்கல்வி துறை அமைச்சராக இருப்பவர் கே.பி. அன்பழகன். இவர்மீது ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்து.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நடப்பு கல்வி ஆண்டில் 11 புதிய கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், தமிழகத்தில் 44.3% மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகிறார்கள் என்றும் அமைச்சர் கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel