பெங்களூரு.
தனது பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு நீதி மன்றத்தில் நித்தியானந்தா தனது கூட்டாளிகள் 7 பேருடன் ஆஜரானார்.
பெங்களூரில் உள்ள நித்தியானந்தா பீடம் மடத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது பென் சீடராக இருந்த ஆர்த்தி ராவ் என்பவர் புகார் கூறி இருந்தார்.
கடந்த 2011ம் ஆண்டு இந்த வழக்கு பதியப்பட்டது. அதன் காரணமாக பெங்களூர் ராம்நகர் போலீ சார் நித்தியானந்தாவை கைது செய்து மைசூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.
அதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் நித்தியானந்தா சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கோர்ட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்து அவருக்கு ஆண்மை சோதனை நடத்தலாம் என்று கூறியது.
இதையடுத்து நித்தியானந்தா சார்பில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதி மன்றம், நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்க பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தாவும் அவரது 7 சீடர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கை வரும் நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.