கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் தங்களது  மத ஊர்வலத்தை ரத்து ரத்து செய்து, இந்து இளைஞருக்கு உதவிய செய்துள்ளனர் அந்த பகுதி இஸ்லாமியர்கள். அவர்களின்  மனித நேயம் நாட்டு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இஸ்லாமியர்களின் புனிதமான பண்டிகைகளில் முகரமும் பண்டிகையும் மிகவும் சிறப்பான தாகும். முகரம் என்பது இஸ்லாமிய மதத்திற்காக உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை செய்யும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

விழாவின்போது  இஸ்லாமியர்கள்  ஊர்வலம் நடத்தப்படும் .ஊர்வலத்தில் வரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்குத் தாங்களே சாட்டையால் அடித்துக் கொள்வதும்,  சிறுபிளேடு போன்றவற்றால் உடலில் கீறிக் கொள்வதும் வாடிக்கை.

இந்த ஆண்டு கொல்கத்தாவில் தங்களது பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்து இளைஞ ருக்காக தங்களது ஊர்வலத்தை ரத்து செய்து உதவி செய்துள்ளனர் அந்த பகுதி இஸ்லாமியர்கள்.

மேற்கு வங்காளத்தில் உள்ள காரக்பூர் பகுதியில், அந்த பகுதியில் உள்ள ஒருவரின் புற்றுநோய் செலவுக்கு,  உதவிடும் நோக்கில் தங்களது முகரம் ஊர்வலத்தை   ரத்து செய்துள்ளனர் அந்த பகுதி இஸ்லாமியர்கள்.

பெரும்பாலான இஸ்லாமியர்கள் வசித்து வரும் காரக்பூர் பகுதியில் மொபைல் ரீசார்ஜ் கடை நடத்தி வருபவர்  அபிர் புனியா (வயது 35). இவருக்கு ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா என்ற வகை ரத்த புற்று நோய் தாக்கி  இருப்பது தெரிய வந்தது.

இந்த நோயை குணப்படுத்த அவர் கீமோ தெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோயில் இருந்து அவர் முழு குணம் பெற  அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுதல் சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு 12 லட்சம் ரூபாய் தேவைப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், அபிர் புனியாவின் பாட்டி மற்றும் பெற்றோரும் கடந்த ஆண்டு தவறிவிட்டனர். தற்போது புனியா தனது மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார். சிகிச்சைக்கு பணமின்றி பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்.

இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த சமாஜ் சங்கா கிளப்பின் தலைவர் அம்ஜத்கான் அவதுக்கு உதவ முன்வந்தார். அவரது சிகிச்சைக்கு தேவையான பணம் திரட்ட முன் வந்தார்.

இதுகுறித்து தனது நண்பர்களுடன் விவாதித்து, இந்த ஆண்டு நடைபெற இருந்த முகரம் ஊர்வலத்தை ரத்து செய்து, அதன் காரணமாக புனியாவுக்கு உதவ முடிவு செய்தார்.

இதையடுத்து, இந்த ஆண்டு வழக்கமாக காரக்பூர் புரத்தான்  பஜார் பகுதியில் நடைபெற இருந்த ஊர்வலத்தை ரத்து செய்து, அந்த விழாவுக்கு செலவழிக்கப்படும் பணத்தை, புனியாவின் சிகிச்சைக்கு வழங்க கோரியிருந்தார்.

இதையடுத்து அந்த பகுதி இஸ்லாமியர்கள் இந்த ஆண்டு முகரம் ஊர்வலத்தை ரத்து செய்து புனியாவுக்கு உதவி உள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்ஜத்கான், அபுர் புனியாவிற்கு முஸ்லீம் சகோதரர்களின் அன்பும் ஆதரவு குறித்தும் தெளிவாக தெரிந்திருக்கும் என்றார்.

இஸ்லாமியர்களின் இந்த மனிதநேயம் அந்த பகுதி மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.