கேடலோனியா
கேடலோனியாவில் நடந்த வாக்கெடுப்பின் போது பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் போலீசிடம் இருந்து காப்பாற்றி உள்ளனர்.
ஸ்பெயின் நாட்டிடம் இருந்து பிரிந்து தனி நாடாக ஆதரவு கோரி கடந்த ஞாயிறு அன்று கேடலோனியாவில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பை பல இடங்களில் போலீசார் தடுத்தனர். சில இடங்களில் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி வாக்களிக்க வந்தவர்களை விரட்டி அடித்தனர்.
இந்நிலையில் கேடலோனியா பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு பெரிதும் உதவி உள்ளனர். பொதுமக்களை தாக்க வரும் போலீசார் அவர்களை தாக்காத வண்ணம் பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஒரு அரண் போல நின்று போலீசாரை தடுத்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பில் குறைவான மக்களே வாக்களித்தாலும் அந்த மக்களில் பெரும்பாலோனோர் கேடலோனியா தனி நாடாக வேண்டும் என்றே வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பு சட்ட விரோதமானது எனக்கூறி வாக்கெடுப்பை ஸ்பெயின் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.