மும்பை:
ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதியை கொடுக்க முடியாதவர்களுக்கு புல்லட் ரெயில் கனவு என சிவசேனா விமர்சனம் செய்து உள்ளது.

மும்பை எல்பின்ஸ்டன் ரெயில் நிலையத்தில் காலை மழை பெய்ததை தொடர்ந்து குறுகிய நடைமேடை மேம்பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. அப்போது நடைமேடை மேம்பாலத்தில் நெரிசலில் ஏற்பட்டதில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக சிவசேனா எம்.எல்.ஏ. அஜய் சவுதாரி கூறுகையில், ‘‘ ரெயில் நிலையங்களில் அரசால் அடிப்படை வசதிகளைகூட செய்து கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் புல்லட் ரெயில் கனவில் உள்ளனர்’’ என விமர்சனம் செய்து உள்ளார்.
[youtube-feed feed=1]