டில்லி,

மிழகத்தில் நிலவி வரும் அரசியல் அசாதரண சூழலில் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை, சசிகலா மற்றும் தினகரன் எங்களுடன் விரைவில் இணைந்து பணியாற்றுவர் என்று கூறினார்.

அதிமுகவில் ஏற்பட்ட உச்சக்கட்ட மோதலை தொடர்ந்து, ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்து, அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி  சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றி, அதை தேர்தல் கமிஷனிலும் தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து, சசிகலா, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து, எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர். அதையடுத்து, சசிகலா அணிக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களையும் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த தம்பித்துரை,  சசிகலா, தினகரன் எங்களுடன் விரைவில் இணைவார் என்ற கூறி உள்ளார்.

மேலும், தமிழகத்தில், தமிழக அமைச்சர்களே ஜெயலலிதா சிகிச்சை மற்றும்  மரணம் குறித்து சர்ச்சையாக பேசி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த தம்பித்துரை, தான் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை பார்த்தானே என்பது குறித்து விசாரணை ஆணையத்திடம் தெரிவிப்பேன் என்று கூறினார்.