திண்டுக்கல்:
கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூக்கள் மலரத்தொடங்கி உள்ளன.
கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவிலும் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதைக்காண சுற்றுப்பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர்.
குறிஞ்சி மலர்களில் 140க்கும் மேற்பட்ட வகை மலர்கள் உள்ளன. அதில் ஒருவகை மலர்கள் தற்போது பூத்துள்ளன. கொடைக்கானலை சுற்றி உள்ள மலைப் பகுதிகளான வடகவுஞ்சி, ஐந்து வீடு, பிரகாசபுரம் சாலை, சகாயபுரம், குறிஞ்சி ஆண்டவர் கோயில், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறிஞ்சி செடிகள் காணப்படுகின்றன.
இவற்றில் சில இடங்களில் குறிச்சி மலர்கள் பூத்துள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பூ பூப்பதால் அதை காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர். நீல வண்ணத்தில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன.
இந்த குறிஞ்சிப்பூக்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, மஞ்சூர், எப்பநாடு, கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காணப்படுகின்றன.
குறிஞ்சி பூவின் சிறப்பை விளக்கும் வகையில் தபால்தலையும் வெளியிடப்பட்டு உள்ளது.
குறிஞ்சி மலர்களில் சுமார் 140–க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே குறிஞ்சி மலர் பூக்கும். அதில் ஒருசில குறிப்பிட்ட வகைகள் ஆண்டு தோறும் பூ பூக்கம். வேறு சில குறிஞ்சி மலர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அரிய வகை குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகள் மற்றும் 16 முதல் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் பூக்கின்றன.