
சென்னை:
தலைமைச் செயலாளருடன் காவல்துறை தலைவர், உள்துறை செயலர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொறுப்பு கவர்னரும் இன்று சென்னை திரும்பி உள்ளார்.
இந்த நிலையில், மாநில சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர் ஆகியோருடன் கோட்டையில் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக பொறுப்பு கவர்னர் இன்று திடீரென சென்னை திரும்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட சிறப்பு காவல்படையினர் உஷாராக இருக்கும்படி தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தற்போது தலைமை செயலாளர் ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel