ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து இடைத்தேர்தலில் ஆளும் பா ஜ க 11 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகளில் 24 இடங்கள் காலியாக இருந்தது. அந்த காலியான இடங்களுக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் 12 இடங்களை கைப்பற்றி உள்ளது. பா ஜ க 11 இடங்களில் வென்றுள்ளது. ஒரு இடத்துக்கான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. நேற்று மாலை முதல் அறிவிப்புக்கள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில் எதிர்கட்சியான காங்கிரஸ்க்கு 12 இடங்கள் கிடைத்துள்ளதற்காக பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் காங்கிரச் தலைவர் சச்சின் பைலட், “பா ஜ க அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை இந்த தேர்தல் தெளிவாக காட்டி உள்ளது. இந்த அரசு கிராமப்புற மக்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் எதிராக உள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். பெண்களுக்கான வன்முறையும் அதிகரித்துள்ளது.” என கூறி உள்ளார்.