டில்லி,

வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் செயல்பட தடை விதிக்கக்கோரி டில்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

பல உபயோகமான  தகவல்கள் உள்பட பல்வேறு வதந்திகளு சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற வலைதளங்கள் மூலம்  பரவி வருவது தற்போது அதிகரித்து வருகிறது.

அதேவேளையில் இதன்மூலம் பயங்கரவாதிகள் தங்கள் தகவல்களையும் பரிமாறிக்கொள்வதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பேஸ்புக், வாட்ஸ்போன்ற சமூக வலைதளங்களுக்கு  தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி டில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், இதுபோன்ற சமூக வலைதங்களில் செயல்படும்  இணையம்மூலம் வாய்ஸ் கால் சேவை அளித்துவருவது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து அக்டோபர் 17-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல்செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.