சென்னை:

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் ஆசிரியர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுள்ளது என்று பெருமிதம் கொண்டார்.

இந்த தேர்வு முடிவுகள் 40 நாட்களில் வெளியிட்டு சாதனை படைத்ததாகவும் கூறினார். தமிழக மாணவர்களுக்கு நீட் போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், வெளி மாநில ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டதை தொடர்பான கேள்விக்கு, வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுகுறித்து பதில் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.