புதுச்சேரி :
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தியது. இது புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வில்லை என்று 778 மாணவர்களை அதிரடியாக நீக்கி இந்திய மெடிக்கல் கவுன்சில் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது.
புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை சென்டாக் எனப்படும் அமைப்பு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இது எம்சிஐ விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து சென்டாக் மருத்துவக் கவுன்சிலிங்கில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் வீட்டில் சோதனை நடத்தினர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் சென்டாக் அலுவலகத்தில் நடைபெற்ற சிபிஐ சோதனையின்போது முக்கிய ஆவனங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ அறிவித்து இருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் புதுவையில் உள்ள
இந்த ஆவணங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து 3 மருத்துவக் கல்லூரிகளில் சோதனை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர்.
இது புதுச்சேரி அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.