மலையாள நடிகர் மோகன் லாலின் நடிப்பில் வெளிவந்த ‘வெளிப்பாடின்றெ புஸ்தகம்’ என்ற திரைப்படத்தின் ஜிமிக்கி கம்மல் பாடல் வரிகள் பெரிய அளவில் தமிழகம் மற்றும் கேரளாவில் ஹிட் ஆனது.
அதிலும், கேரளக் வணிகவியல் கல்லூரி ஒன்றில் படிக்கும் பெண்கள் இப்பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோ யூடியுபில் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்திருந்தது. இந்த நிலையில், இப்பாடல் மெட்டை பயன்படுத்தி மத்திய மோடி ஆட்சி முறையை கிண்டலடித்து நையாண்டி பாடலை கேரளியர்கள் வெளியிட்டுள்ளனர். நையாண்டி பாடலை எழுதுவதில் மலையாளத்தில் புகழ் பெற்ற அப்துல் காதர் என்பவரே இப்பாடலையும் எழுதியுள்ளார்.
இப்பாடலின் முதல் காட்சியாக, பிரதமர் மோடி, ஜப்பானில் டிரம்ஸ் வாசிப்பதை இணைத்துள்ளனர். இப்பாடலின் வரிகள் மரணகாலாயாக இருக்கின்றன. “இந்தியாவை ஆட்சி செய்து கொண்டு, மோடிஜி கட்டுண்டு போனார். வளர்ச்சியின் பெயரை சொல்லி மோடிஜி விலசுகிறார்(சொகுசாக இருக்கிறார்) இங்கே இருக்கும் கறுப்பு பணம் துடைத்தெறிதல் என்ற பெயரில் உலகப் புகழ்பெற்ற முட்டாள்தனம் செய்துவிட்டார்” என தொடருகிறது இப்பாடல். அதோடு, கேரள பாஜக மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரனையும், புதிதாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அல்போண்ஸ் கண்ணந்தானத்தையும் கிண்டலடிக்கிறது.
மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானத்தின் மனைவி, தனது கணவர் அமைச்சர் பொறுப்பேற்ற போது மலையாள சேனல் நிருபர் ஒருவரிடம் பேசிய முறையை கிண்டலடித்து, “என்ற அம்மே சொந்த மொழியில் உள்ள பாட்டனதால் கொஞ்சம் ரிலாக்ஸ் உண்டு. இங்கிலீஸில் கேட்டு கேட்டு சலிப்பாச்சு” என்ற பாட்டுக்கு ஏற்றவாறு அவர் கூறியதை மாற்றியமைத்து நையாண்டி செய்வது, மலையாளிகளை ரொம்பவே ஈர்த்துவிட்டது.
தற்போது இப்பாடல் இணயதளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலை தடை செய்ய வேண்டும் என்று கேரள பாஜகவில் குரல் எழும்புவதும் குறிப்பிடத்தக்கது. – நந்தகுமாரன்
[embedyt] https://www.youtube.com/watch?v=ll22tgnnYOs[/embedyt]