சென்னை,

ட்டுனர் உரிமம் இருந்தால் தான் வாகனம் வாங்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் புதிய வாகனம் வாங்குபவர்கள், தாங்கள் வாகனம் ஓட்டுவதற்கான டிரைவிங் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும், வாகனம் வாங்கும்போது, ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் காண்பிக்கப்பட வேண்டும், வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லை என்றால் வாகனங்கள் வாங்க முடியாது  என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, வாகன உரிமையாளர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், வாகனம் வாங்கும் பலர், தங்களது வாகனங்களை இயக்க ஓட்டுனரை அமர்த்தி கொள்கின்றனர். அரசின் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதி மன்றம், அரசின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.