சென்னை,
சட்டத்தை உருவாக்கியது நாம்; அதை சரியாக பயன்படுத்துவோம்’ என்று நடிகர் கமலஹாசன் உச்சநீதிமன்றம் தடை குறித்து டுவிட் செய்துள்ளாது.
தமிழகத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், அதுகுறித்து நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே நீட் குறித்து ஆட்சியாளர்களுக்கு டுவிட் செய்திருந்த கமல், குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம், இது மாணவர் எதிர்காலம் பற்றியது. தயை கூர்ந்து உடனே பேசுங்கள் என்று கமலஹாசன் தனது டுவிட்டரில் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது உச்சநீதி மன்ற தீர்ப்பை கோடிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில்,
இந்த சட்டதை உருவாக்கியது நாம்தான். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறென்றால் மாற்றிக்கொள்ளுங்கள்.
ஆனால் அதை அவமானம் செய்வதும், தவறாகப் பேசுவதும் கூடாது. விவாதங்கள் மூலம் மாற்றத்தை கொண்டுவர முடியும். வாருங்கள் விவாதிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.