கொல்கத்தா
மேற்கு வங்க மாநில அரசு, திருநங்கைகளின் சுய வேலைக் குழுவால் செய்யப்பட்ட பொருட்களுக்கான விற்பனைக் கூடமான “சினேகோ நிர்” நவராத்திரி முதல் துவங்கப்பட உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திருநங்கைகள் மேம்பாட்டு வாரியம் சமீபத்தில் துவங்கப் பட்டது. அந்த வாரியம் ”சினேகோ நிர்” என்னும் விற்பனைக்கூடத்தை துவங்க உள்ளது. இது முழுக்க முழுக்க திருநங்கைகள் பணி புரியும் விற்பனைக்கூடமாகும். இந்த விற்பனையகம் கோகலே சாலையில் ரபீந்திர சதன் அருகே துவங்கப்பட உள்ளது. இங்கு திருநங்கைகள் சுய உதவிக் குழுவால் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
வரும் நவராத்திரியில் துவங்கப்படும் இந்த சினேகோ நிர் விற்பனையகத்தில், ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், நாகரிக ஆபரணங்கள், மற்றும் பல பொருட்கள் விற்பனை செய்யப்படும், இந்த விற்பனையகம் வளர்ச்சி அடைய அடைய இந்தப் பொருட்களை ஆன்லைனில் சினேகோ நிர் விற்கத் துவங்கும். விற்பனை மட்டும் இன்றி சமூக வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆலோசனையும் சினேகோ நிர் வழங்கும்.
மேற்கண்ட தகவல் அகில இந்திய திருணாமுல் காங்கிரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.