சென்னை,
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்ட எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினர்.
அப்போது, நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் டிடிவிக்கு எதிராக வியூகம் அமைப்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கு இடையேயானா பிளவு சமீபத்தில் தீர்ந்து ஒரே அணியாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டார்.
இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 19 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கவர்னரை சந்தித்து, எடப்பாடியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என கவர்னகுக்கு கடிதம் கொடுத்தனர்.
இந்நிலையில், திமுக உள்பட எதிர்க்கட்சியினர் கவர்னரையும், இன்று ஜனாதிபதியையும் சந்தித்து, எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இன்றைய கூட்டத்தின்போது, விழுப்புரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலும், திருச்சி மாவட்ட எம்எல்ஏக்கள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையிலும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில், நெல்லை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரை சந்தித்தனர்.
அப்போது, டிடிவிதினகரன் நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்தும், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் தொகுதி பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.