ஸ்ரீஹரிகோட்டா:
இன்று பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்டவுன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கனவே செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய செயற்கை கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
அதன் காரணமாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.
இந்த செயற்கை கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்துகிறது.