திருவனந்தபுரம்:

லையாள நடிகை பாவனா கடத்தல் வழக்கில்  பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  அவரது மனைவி காவ்யா மாதவனும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வந்துகொண்டிருந்த போது மர்ம கும்பலால் கடத்தப்பட்டு, காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக  பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட  6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பல்சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், மேடம் சொன்னதின்பேரிலேயே பாவனாவை கடத்தியதாகவும் போலீசாரிடம் கூறி உள்ளார். பல்சர் சுனிலிடம் நடைபெற்ற விசாரணையின்போது, அனைத்து வகையான குற்றங்களும் மேடம் சொன்னதின்பேரிலேயே செய்ததாக கூறி உள்ளார்.

மேலும், காரில் பாவனாவிடம் பாலியல் சில்மிஷம்  செய்த மொபைல் வீடியோவை நடிகர் திலிப்பின் மனைவியான காவ்யா மாதவனின் நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பல்சர் சுனில் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து கொச்சி காக்கநாட்டில் உள்ள காவ்யா மாதவனுக்கு சொந்தமான  நிறுவனத்தில் கொச்சி போலீசார் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த பலாத்கார பிரச்சினைக்கு மூலகர்த்தாவாக இருந்து ஆலோசனை வழங்கி செயல்பட்டது, திலிப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவன்தான் என்பதும், மேலும் பல ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்  போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், நடிகை காவ்யா மாதவன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என மலையாள திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது.