சென்னை:

குட்கா விவகாரத்தில் சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் எதிர்த்து திமுக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.

சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட குட்கா விவகாரம் குறித்து விவாதிக்க கோரி, குட்காவை கொண்டு வந்ததாக புகார் கூறப்பட்டு, அதுகுறித்து விசாரணை செய்ய உரிமைக்குழுவுக்கு அனுப்பப்ட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உரிமைக்குழு கூட்டத்தில்,  குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்த திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், சட்டமன்ற உரிமைக்கு விசாரணைக்கு முன்னர், தங்களது  வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் செப்டம்பர் 7ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.