புதுச்சேரி:

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கி உள்ள தனியார் விடுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பி நிலவி வருகிறது.

அங்கு தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்ததை தொடர்ந்து டிடிவி தனி அணியாக செயலபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக 20 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

அவர்கள் எடப்பாடி அணிக்கு தாவி விடாதவாறு, அவர்களை புதுச்சேரி சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மாநில அதிமுகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். அதையடுத்து, தமிழக எம்எல்ஏக்கள் அங்கு இருப்பதால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக  புதுச்சேரி மாநில  முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் போலீசில் புகார் கொடுத்தார்.

அவர் புகாரையடுத்து, புதுச்சேரி போலீசார் ரிசார்டில் குவிக்கப்பட்டனர்.  தொடர்ந்து காவல் கண்ணபாணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் அந்த தனியார் விடுதி முழுவதும்  ஆய்வு நடத்தினார். மேலும், அங்கு தங்கியுள்ள எம்எல்ஏக்களின் விவரங்களை கேட்டறிந்தார். மேலும், எம்எல்ஏக்களை கண்காணித்து வரும் வெற்றிவேலின் வடசென்னை பாதுகாவலர்களையும் விசாரித்து, அவர்கள் குறித்த  விவரங்களை சேகரித்தார்.

இதன் காரணமாக அங்கு தங்கி உள்ள எம்எல்ஏக்கள் பீதியில் காணப்படுகின்றனர்.  தற்போது போலீசார் வந்துள்ளனர் … அடுத்து யார் வருவார்களோ என அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.