டில்லி :
நாளை ரூ.200 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிக்க பழைய ரூ. 500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.
இவற்றுக்கு மாற்றாக புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன.
இதனால் சில்லரைத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டது.
இந்த தட்டுப்பாட்டைப்போக்க புதிய ரூ.20, ரூ.50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியானது.