சென்னை,

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஏற்கனவே பதிவு செய்து, மறதி மற்றும் ஏதேனும் காரணமாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு வழங்கி உள்ளது தமிழக அரசு.

இதன் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகள் ( 2011-2015)  புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் புதுப்பித்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்கள் உரிய சான்றிதழ்களுடன் புதுப்பித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் மாதம் 21 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று புதுப்பித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, நேரில் செல்ல இயலாதவர்கள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.