சென்னை:
தமிழக அமைச்சர்கள் அனைவரும் இன்று (வியாழன்) சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் (இபிஎஸ்-ஓபிஎஸ்) இணைப்பை தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தமிழக ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். ஆகவே, முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் டிடிவி தினகரன் தரப்பினர் பாதுகாப்பாக புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், சட்டசபையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இதன் காரணமாக ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.
‘இந்நிலையில், அமைச்சர்கள் அனைவரும் இன்று சென்னை வருமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில், அமைச்சர்களையும், கட்சியின் மூத்த உறுப்பினர்களை சிலரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் தொடர்ந்து அறிவித்து வரும் வேளையில், அதை எதிர்த்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய அமைச்சர்களை அவசரமாக சென்னைக்கு அழைத்திருப்பதாக கூறப்படுகிறது.
பொதுக்குழுவை கூட்டுவது, இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த முதல்வர் எடப்பாடி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.