விவேகம் படத்தின் டிக்கெட்டை 500  ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக, திரையரங்கு உரிமையாளர்கள்மீது அஜீத் ரசிகர்கள் புகார் கூறி உள்ளனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் திரைப்படம் நாளை  வெளியாகிறது.

இதன் காரணமாக அஜீத்தின் ரசிகர்களுக்கு பிரத்யேக காட்சிகள் திரையிடப்படுகிறது.

தற்போது ஜிஎஸ்டி வரி காரணமாக தியேட்டர் கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது விவேகம் படத்திற்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக  பல இங்களில் புகார் வந்துள்ளது.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அஜீத் ரசிக்ர்கள் புகார் கூறி உள்ளனர்.

சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘விவேகம்’ படத்திற்கான முன்பதிவின்போது, முதல்நாள்  காட்சிகளுக்கு ரூபாய் 500ம், மற்ற நாள் காட்சிகளுக்கும் அதிக  ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.

திரையரங்க நிர்வாகம், கட்டணத்தை வசூலித்துவிட்டு டிக்கெட் தராததால் கோபமடைந்த 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கொடுத்த பணத்துக்கு டிக்கெட் கொடுங்கள், இல்லாவிட்டால் அதற்கான ரசீது கொடுங்கள் என தகராறில் ஈடுபட்டுதை தொடர்ந்து அந்த இடத்திற்கு போலீஸ் உதவி கமிஷனர் வருகை புரிந்தார்,

அவரிடம் ரசிகர்கள் புகாரி கூறியதை தொடர்ந்து, தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் லோகநாதன் திரையரங்கு உரிமையாளரிடம் விசாரணை நடத்தி,  கூடுதலாக வசூல் செய்த பணத்தை திருப்பி கொடுக்க  உத்தரவிட்டார்.