லூரு

 ஆந்திராவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தொகையில் ஏற்கனவே உள்ள கழிவறைகளை கணக்கு காட்டி ரூ. 2 கோடி அளவில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 182223 கழிப்பறை இல்லா வீடுகளுக்கு கழிப்பறை கட்ட நிதி உதவி அளிக்க திட்டம் தீட்டப்பட்டது.   இதில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூரு, மற்றும் 7 சுற்றுப்புற கிராமங்களுக்கு, 5096 கழிப்பறைகள் கட்ட பணம் ஒதுக்கப்பட்டது.

அதன்படி வழங்கப்பட்ட தொகைகளில், சுமார் 5089 கழிப்பறைகள் ஏற்கனவே கட்டப்பட்டு உபயோகத்தில் உள்ளவைகள் ஆகும்.   இவற்றை புதிதாக கட்டப்பட்டுள்ளதாக காட்டி, சுமார் ஒன்றரை கோடி முதல் ரூ 2 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இவற்றில் சில வீடுகள் மாடி வீடுகளாகவும்,  ஒவ்வொரு வீட்டிலும் ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

ஏலூருவை சேர்ந்த கம்பவுண்டர் ஒருவர் கழிப்பறை கட்டும் காண்டிராக்டர் என்னும் பெயரில் ரூ.  28 லட்சத்துக்கு மேல் பெற்றுள்ளார்.  அதே போல பஞ்சாயத்து மெம்பர் ஒருவரும் தன்னை காண்டிராக்டர் என கூறிக் கொண்டு சுமார் 38 லட்சம் பெற்றுள்ளார்.  இதே போல பல சமூக நலப் பணியாளர்களுக்கும் தொகை வழங்கப்பட்டுள்ளது.   ஒரு பஞ்சாயத்து யூனியனை சேர்ந்த காண்டிராக்டர் ஒருவர் தனது உறவினர்கள் வீட்டுக்கு அரசு செலவில் கழிவறை கட்டித்தர ஒப்புதல் பெற்று பணமும் வாங்கியுள்ளார்.   இவர் கழிவறை கட்டியதாக கணக்கு காட்டப்பட்ட வீடுகள் அனத்துமே 2 அல்லது 3 மாடி வீடுகள்.   ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது தலா 4 கழிப்பறகள் ஏற்கனவே உள்ளது.

மேற்குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டு அரசுக்கு புகாராக அளிக்கப்பட்டது.   அதைப் பெற்றுக் கொண்ட மேற்கு கோதாவரி மாவட்ட ஆட்சியாளர் குழு ஒன்றை அமைத்துள்ளார்.   அந்தக் குழு அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறது.   குழுவின் அறிக்கை கிடைத்ததும் உடனடியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சியாளர் உறுதி அளித்துள்ளார்.