மும்பை:

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் கிளினிக்குகளை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ரயில் நிலையங்களில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும், நிலையங்களை சிறந்த முறையில் பராமரிக்கவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகறது.

இதன் ஒரு பகுதியாக, ரயிலில் பயணம் மேற்கொள்வோர் உடல்நலனை கருத்தில் கொண்டு மிகவும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கு கிளினிக்குகளை தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட 10 ரயில் நிலையங்களில் இந்த கிளிக்குகள் ஆரம்பிக்கப்படும். இதற்கு ‘ஒரு ரூபாய் கிளினிக்’ என பெயரிடப்பட்டுள்ளது.

அதாவது மருத்துவரின் கட்டணமாக ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும். ரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக செய்யப்படும். சர்க்கரை பரிசோதனைக்கு ரூ.25 , . இசிஜி ரூ.50 என்று கட்டணம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்த கிளினிக்குகள் இயங்கும். அடுத்து, மேற்கு ரயில்வேயின் கீழ் செயல்படும் 24 ரயில் நிலையங்களில் ஆரம்பிக்கப்படும்.