வாஷிங்டன்,
அமெரிக்காவின் உயர்ந்த பதவியில் அதிகாரிகளாக 3 இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டு உள்ளதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் கொடுத்துள்ளது.
இந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
விசா முறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்த டிரம்ப், பல்வேறு முக்கிய பதவிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை உபயோகப்படுத்த தவறவில்லை.
டிரம்ப் அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளுக்கு 3 இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நியமனத்துக்கு அமெரிக்க செனட் சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க வாழ் இந்தியர்களான, நீல் சட்டர்ஜி அமெரிக்காவின் எரிசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுபோல அமலாக்க பிரிவின் அறிவுசார் சொத்து ஒருங்கிணைப்பாளராக விஷால் ஆமீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதுபோல பெரு நாட்டிற்கான அமெரிக்க தூதராக கிருஷ்ணா அர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தூதர் நிலையிலான பதவிகளில் நிக்கி ஹாலேவுக்கு அடுத்தப்படியாக கிருஷ்ணா அர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க வாழ் இந்தியர் நிக்கி ஹேலி நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.