·

அகற்றப்பட்ட சிலை – கமல், சிவாஜி (தேவர்மகன் படத்தில்)சிவாஜிக்கு புதிதாக ஒரு சிலை செய்வோம். அதனை எந்நாளும் காப்போம்’ என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் சிலை அமைக்கப்பட்டது. அந்த  சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.  உயர்நீதிமன்றம் சிவாஜி சிலையை அகற்ற உத்தரவிட்டது.

இந்த நிலையில்  சிவாஜி சிலை அகற்றப்பட்டது.

இதுகுறித்து நடிகர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘சிவாஜி கணேசன், ரசிகர் மனதிலும், நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலை செய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்குமப்பால்  என் அப்பா’ என்று ட்விட் செய்துள்ளார்.