டேராடூன்

த்தரகாண்ட்டில் உள்ள புலிகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை ஒரே வருடத்தில் உயர்ந்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜிம் கோர்பட் நேஷனல் பார்க் மற்றும் ராஜாஜி டைகர் ரிசர்வ் என இரு புலிகள் சரணாலயங்கள் உள்ளன.  இவற்றில் தற்போதைய கணக்கெடுப்பின் போது புதியதாக சில புலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து உத்தர்காண்ட் முதல்வர்     திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது :

”ஜிம் பார்க்கில் சென்ற வருடம் 2015-16ல் 163 பெரிய புலிகளும் ஆறு குட்டிகளும் இருந்தன  தற்போது அந்த எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது.   ராஜாஜி ரிசர்வில் 16ஆக இருந்தது தற்போது 24 ஆக உயர்ந்துள்ளது.   மொத்தத்தில் 63 புலிகளும், 11 குட்டிகளும் அதிகமாகி உள்ளது,

இதன் மூலம் புலிகளின் எண்ணிக்கையில் அதிகமுள்ள இரண்டாம் மாநிலமாக உத்தர்காண்ட் ஆகியுள்ளது.  நான் காட்டிலாகாவுக்கு எனது மகிழ்வையும் வாச்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் “ என்றார்.

தற்போது 400 புலிகள் உள்ள கர்நாடகா இந்தியாவில் அதிக புலிகள் வாழும் மாநிலமாக உள்ளது.