ரியாத்:

மரண தண்டனை வாசலில் இருக்கும் 6 பள்ளி மாணவிகளை காப்பாற்ற மேற்கத்திய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சவுதி அரேபியாவில் பாத்திமா அல் கிவானி என்ற பள்ளி மாணவி தனது தோழிகள் மற்றும் 3 ஆண் நண்பர்களுடன் தனது பிறந்தநாள் விழாவை தோழியின் வீட்டில் கடந்த ஆண்டு கொண்டாடினார். இந்த வீட்டின் பக்கத்து வீட்டில் ஒரு மசூதியின் இமாமின் உதவியாளர் தங்கியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து மத போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வ ந்து பார்த்தபோது பெண்கள் தங்களது ஆண் நண்பர்களுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். இதைய டுத்து அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

6 பள்ளி மாணவிகளும் கடந்த ஒரு வருடமாக எவ்வித குற்றமும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். ஷரியத் சட்டப்படி இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேசமயம் சிறுவர்கள் பாதிக்கப்பட கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுவும் ஆண்களுக்கு மட்டுமே இது பொருந்தும் வகையில் உள்ளது. பாலின குற்ற செயல்களில் ஈடுபடும் பெண்களை தலை துண்டித்தும், பொது இடத்தில் கல்லால் அடித்து கொலை செய்வது போன்ற கொடூர மரண தண்டனைகளை வழங்கி வருகிறது.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக உள்ள சவுதி அரேபியா மனித உரிமை மீறலில் உ ச்சத்தில் இருக்கிறது. கடும் போராட்டத்திற்கு பிறகு தற்போது தான் மகளிருக்கு வாக்குரிமை அளிக்கப்பட் டுள்ளது. சவுதியின் மனித உரிமை மீறல்களை ஐநா அல்லத ஐரேபாப்பிய யூனியன்களில் உள்ள மனித உரிமை ஆர்வலர்ளிடம் இருந்து அழுத்தங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அங்கு சென்ற அமெரிக்க அதிபரும் மனித உரிமை மீறல் பதிவேட்டை பார்வையிடவில்லை. ஆனால், ஆயுத ஒப்பந்தத்தில் மட்டும் கையெழுத்திட்டு திரும்பியுள்ளார்.