காலே:

லங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வெளிநாட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புது சாதனை  படைத்தது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது.

இதில் இந்திய அணி, முதல் இன்னிங்சில், 600 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில், 291 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

498 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது. கேப்டன் கோலி, டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்த்தார்.  இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.

இதையடுத்து  இலங்கை அணி 550 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சில் இலங்கை அணி சுருண்டது.  ஷமியின் வேகப்பந்தில்  தரங்கா (10) ஆட்டமிழந்தார். உமேஷ் வேகப்பந்தில் குணதிலகா (2) வெளியேறினார்.

மெண்டிஸ் ஓரளவு தாக்குப்பிடித்து 36 ரன் எடுத்தார். மாத்யூஸ் 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டிக்வெல்லா 67 ரன்களைக் குவித்தார்.  கருணரத்னேவும் சிறப்பாக விளையாடி 97 ரன்கள் எடுத்தார்.

ஆனால் அவர்களுக்கு பின் வந்த   பிரதீப்,  குமாரா  ஆகியோர்  டக் அவுட் ஆனார்கள்.  இறுதியில்  இலங்கை அணி, 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.