சென்னை,

மிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினை காரணமாக, ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளை இளைஞர்கள், தன்னார்வ அமைப்பினர் சீர் செய்து வருகின்றனர்.

தமிழக அரசு தண்ணீர் பஞ்சத்தை போக்கவும், மழை பெய்யும்போது தண்ணீரை தேக்கி வைக்கவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வராத நிலையில், தமிழகத்தில் தன்னார்வ அமைப்பினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீப காலமாக திமுகவும் இதுபோன்ற ஏரி குளங்களை தூர் வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை காவல்ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னைக்கு குடிநீர் வழங்கும் போரூர் ஏரியை சுத்தம் செய்தார்.

சென்னையின் குடிநீர் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்து வரும்,  போரூர் ஏரியின் கரையை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உள்பட 1,200 பேர் இன்று சுத்தம் செய்துள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனரின் இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.