டில்லி:

‘‘காஷ்மீர் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்தால் மூவர்ண கொடியை யாராலும் காப்பாற்ற முடியாது’’ என்று அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாய கட்சியின் தொண்டர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து துணிச்சலுடன் போராடி காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை எடுத்து செல்கின்றனர். இந்த நிலையில் அரசியலமைப்பு சட்டத்தில் எவ்வித திருத்தங்கள் மேற்கொண்டாலும் அதை ஏற்கமாட்டோம்.

திருத்தங்களை மேற்கொண்டால் காஷ்மீர் மாநிலத்தில் மூவர்ண கொடியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று நான் கூறுவதற்கு தயக்கமில்லை என்பதை நான் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

திருத்தம் செய்வதால் பிரிவினைவாதிகளை இலக்காக கொள்ளவில்லை. மாறாக தேர்தலில் இந்தியாவை பங்கு பெறச் செய்தவர்களை பலவீனப்படுத்தும் செயலாகிவிடும். காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கும் அவர்களின் கண்ணியத்தையும், மரியாதையையும் பலவீனப்படுத்தும் செயலாக தான் இருக்கும்’’ என தெரிவித்துள்ளார்.

‘‘ இச்சட்டம் எங்களுக்கு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி கொண்டு வரப்பட்டது கிடையாது. குடியரசு தலைவரால் கொண்டு வரப்பட்டது. 1954ம் ஆண்டு ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவராக இருந்தபோது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு 370வது சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

இச்சட்டத்தின் மூலம் நாட்டின் இதர பகுதிகளை சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் அசையா சொத்துக்களை வைத்திருக்க முடியாது. அதேபோல் அரசுப் பணிகளிலும் சேர முடியாது.

காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டம் திருத்தம் தொடர்பான தன்னார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.