டில்லி

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்திய ராணுவம் 35 மோப்ப நாய்களை டில்லி போலீசாருக்கு அனுப்புகிறது.

தில்லியில் தீவரவாத தாக்குதல் பற்றிய அச்சுறுத்தல்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.  கடந்த திங்கட்கிழமை உளவுத்துறையிடமிருந்து வந்த தகவலின்படி டில்லி நகரில் நுழைந்துள்ள இரு தீவிரவாதிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தவிருப்பதாக தெரிய வருகிறது.

இதன் காரணமாக மோப்ப நாய்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளை கண்டறிய டில்லி போலீச் திட்டமிட்டுள்ளது.  தற்போதுள்ள 60 மோப்ப நாய்களைத் தவிர மேலும் 150 நாய்கள் தேவைப்படுகிறது.  இதனால் இந்த மோப்ப நாய்களை அனுபி வைக்கும்படி இந்திய ராணுவத்தை டில்லி போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய ராணுவம் 100 நாய்களை அனுப்பு ஒப்புக்கொண்டுள்ளது.  இந்த மாத இறுதிக்குள் 35 நாய்கள் அனுப்பப்படும்.  இந்த நாய்கள் ஆறிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை பயிற்சி பெற்றவை.  மீதமுள்ள நாய்களுக்கும் இது போலவே பயிற்சி அளிக்கப்பட்டு பிறகு அனுப்பப்படும்.

டில்லியில் மோப்ப நாய்கள் பொதுவாக மெட்ரோ ரெயில் நிலையங்கள், ஓட்டல்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொள்ளும் விழாக்களில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.  இந்த நாய்கள், ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடார் போன்ற வகையை சார்ந்தவை.  சுமார் எட்டு வருடங்கள் வரை இவை உபயோகப் படுத்தப்படுகின்றன.  பணி முடிந்ததும் விலங்குகளை பாதுகாக்கும் தன்னார்வ நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் படுகின்றன.