சென்னை

குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிப்பாரா என்பது குறித்து அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற் கான தேர்தல் இன்று நடக்கிறது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ராம்நாத் கோவிந் துக்கு அதிமுகவும், மீரா குமாருக்கு திமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. திமுகவில் 89 எம்எல்ஏக்களும், 4 மாநிலங்களவை எம்.பி.க்களும் இருக்கின்றனர். இன்று காலை முதல் சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரண மாக கடந்த எட்டு மாதங்களாக கோபாலபுரம் வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவரும், திருவாரூர் தொகுதி எம்எல்ஏவு மான கருணாநிதி, இத்தேர்தலில் வாக்களிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து நேற்று மு.க.ஸ்டாலின் ‘‘குடியரசுத் தலைவர் தேர்தலில் கருணாநிதி வாக்களிப்பாரா என்பது நாளைதான் (இன்று) தெரியும்’’ என்றார்.

ஆனால் இதுவரை வாக்குப்பதிவு நடக்கும் சட்டபேரவை வளாகத்துக்கு கருணாநிதி வர இருப்பதா தகல் ஏதும் இல்லை. ஆகவே அவர் வாக்களிக்க வருவது சந்தேகம்தான் என்று பேசப்படுகிறது.