லண்டன்:
67 வயதாகும் ஒரு மூதாட்டியின் கண்ணில் 27 கான்டக்ட் லென்ஸ்கள் இருந்தை பிரிட்டன் கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த மூதாட்டிக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரது கண்ணில் நீலநிறத்தில் பூசனம் பூத்திருந்த ஏதோ ஒன்று வட்டமாக இருப்பதை பயிற்சி மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்தார்.
அது கான்டக்ட் லென்ஸ் என்பது தெரியவந்தது. இந்த பூசனம் பூத்த லென்ஸ் தான் அவருக்கு பார்வை குறைபாடையும், பிரச்னையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வயது முதிர்ச்சி காரணமாக கண்ணில் பிர ச்னை ஏற்பட்டுள்ளது என்று மூதாட்டி நினைத்துள்ளார்.
இதையடுத்து அந்த லென்ஸ் இருந்த பகுதியை தீவிர ஆராய்ச்சி மேற்கொண்ட மருத்துவர்கள் அதிர் ச்சியடைந்தனர். முதல் கட்ட பரிசோதனையில் அந்த கண்ணில் 17 லென்ஸ்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் அடுத்தகட்ட பரிசோதனையில் மேலும் 10 லென்ஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 27 கான்டக் லென்ஸ்கள் இருந்தது. உடனடியாக கண்புரை அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டது. நீண்ட காலமாக லென்ஸ்கள் இருப்பதால் விழிகுழி அலர்ஜி ஏற்பட்டிருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அந்த மூதாட்டி 35 வருடங்களாக மாதந்தோறும் மாற்றும் வகையிலான கான்டக்ட் லென்¬ஸை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த நவம்பரில் நடந்துள்ளது. ஆனால் இந்த மாதம் வெளியான பிரிட்டன் மருத்துவ இதழலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
‘‘17 லென்ஸ்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு இருந்தது. இதை அந்த நோயாளி எங்களிடம் சொல்லவே இல்லை. ஏன் என்றால் இந்த பூசனம் படர்ந்த லென்ஸ்கள் அவருக்கு பெரிய அளவில் தொந்தரவு கொடுத்திருக்கும். அவற்றை உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் அதிக அளவில் பே க்டீரியாக்கள் கண்ணில் பரவும் வாய்ப்பு ஏற்படும்’’ என்று அந்த இதழில் டாக்டர் ரூபல் மோர்ஜாரியா தெரிவித்துள்ளார்.