போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் சுசில் வாஸ்வனி. இவர் பாஜ தலைரான இவர் கடந்த டிசம்பர் மாதம மகாநகர் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.150 கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனால் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 சொத்துக்கள் பினாமி பெயரில் இவர் வைத்திருந்தது தெரியவந்தது.
சன்விஷன் இன்ப்ரா டெக் பிரைவேட் லிட்., மற்றும் குருமுக் தாஸ் கான்ட்ராக்டர் பிரைவேட் லிட் என்ற பெயர்களில் இந்த சொத்துக்கள் உள்ளது. இதற்கான ஆவணங்களை வாஸ்வனியிடம் இருந்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதன் உரிமையாளர் தான் தான் என வாஸ்வனி ஒப்புக் கொண்டார். இதையடுத்து அந்த 2 சொத்து க்களையும் வருமான வரித்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் இவரது கட் டுப்பாட்டில் இருந்த கூட்டுறவு வங்கி மூலம பல கோடி மதிப்பிலான கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்பட்டது.
இது இவருடைய பணம் மட்டுமல்ல. அவை பல பாஜ, ஆர்எஸ்எஸ் தலைவர்ளுடைய பணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. மத்திய பிரதேச வீட்டு வசதி கழக தலைவராக இருந்த இவர் அமைச்சரு க்கு சமமான சலுகைகளை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக இரு க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.