சென்னை:

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் ரூ350 கோடி சொத்து விவகாரம் குறித்து டில்லியில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன்.

ஜெயலலிதாவை யாரேனும் சந்திக்க வேண்டும் என்றால் இவர் மூலமாகவே தொடர்புகொள்ள முடியும். தவிர ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பல நிறுவனங்களில் பூங்குன்றன் இயக்குநராக இருந்தார்.

தற்போதும் சில நிறுவனங்களுக்கு பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது பூங்குன்றனை டில்லிக்கு வரவழைத்துள்ள வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அங்கு பூங்குன்றனின் ரூ350 கோடி சொத்து விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

அவர் பெயரில் உள்ள இந்த சொத்துகள் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதா அல்லது சசிகலா குடும்பத்துக்கு உரியதா என்பது அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.